ஜப்பானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டச்சான்று பெற்ற அதிரை மாணவர்கள்!(படங்கள் இணைப்பு)

ஜப்பான் டோசிக்கன் நகரில் உள்ள ஆஷிகாஹா கம்யூனிட்டி கல்லூரியில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் அதிரை மாணவர்களும் உண்டு. நமதூர் மேலத்தெருவை சேர்ந்த சம்சுல் ரஹ்மான், நடுத்தெருவை மொய்தீன்,அசாருதீன் ஆகியோர் மேற்படிப்பு  படித்துவந்தனர்.மேற்ப்படிப்பு நிறைவு பெற்றதை அடுத்து இன்று ஆஷிகாஹா கம்யூனிட்டி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அதிரையை சேர்ந்த மூன்று பேரும் பட்டச்சான்று பெற்றனர்.

பட்டச்சான்று பெற்ற அதிரை மாணவர்களுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது. 

Advertisement

Close