வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை?சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி!

வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் முறை என்ற தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளளனர்.  கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என தகவல் பரவி வருகிறது. அதாவது வரும் மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை ராமநவமி என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை.  29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை தினம். 30-ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும். 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிதியாண்டுக்கான இறுதி நாள் என்பதாலும், ஏப்ரல் 1-ம் தேதி புதன்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான முதல் நாள் என்பதாலும் கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இரு தினங்களும் விடுமுறை என தகவல் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கூறியது ஏப்ரல் 28-ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. மேலும் ஏப்ரல் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். அடுத்த நாள் ஏப்ரல் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும் கூட அன்று வழக்கம்போல் வங்கிகள்  இயங்கும்.  எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என வங்கித்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Close