அதிரையில் லயன்ஸ் சங்கம் வழங்கிய பல்வேறு நலத்திட்ட உதவிகள்!(படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2014-2015 ஆம் ஆண்டின் ஆளுநரின் அலுவல் பூர்வ வருகை இன்று மாலை 7.00 மணியளவில் லாவண்யா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு Ln.M.சாகுல் ஹமீது (தலைவர்,லயன்ஸ் சங்கம்) அவர்கள் தலைமை தாங்கினார்.

இதனையடுத்து அலுவல் பூர்வ ஆய்வு மற்றும் சேவைத் திட்டங்களை மாவட்ட ஆளுநர் MJF.Ln.K.பிரேம் ,324- A2 மாவட்ட ஆளுநர் மற்றும் மாவட்ட முதல் பெண்மணி Lioness.P.குமுதவள்ளி பிரேம் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து MJF.Ln.D.மணிவண்ணன்(மாவட்ட அவைச் செயலாளர்),MJF.Ln.V.மூர்த்தி (மாவட்ட அவைப் பொருளாளர்), Ln.R.பாலசுந்தரம்(மண்டலத் தலைவர்), Ln.R.கோவிந்தராஜு (வட்டாரத் தலைவர்),Ln.D.ராஜேந்திரன்,GAV (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

மேலும் மாவட்ட தலைவர்கள் Ln.ஹாஜி.S.M.முகம்மது முகைதீன். Ln.பேரா.Major.Dr.S.P.கணபதி,Ln.ஹாஜி.M.நெய்னா முகம்மது, Ln.பேரா.K.செய்யது அகமது கபீர்,Ln.M.அகமது,Ln.ஹாஜி.S.A.அப்துல் ஹமீது(உறுப்பினர் வளர்ச்சித் தலைவர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை Ln.ஹாஜி.M.A.முகம்மது அப்துல் காதர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் Ln.Prof.Dr.N.M.I.அல் ஹாஜி (செயலர்), Ln.M.நெய்னா முகமது, Ln.M.ஆறுமுகசாமி (பொருளாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

இதனைதொடர்ந்து மாவட்ட ஆளுநர் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இதில் அதிரை வள்ளியம்மை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு WATER PURIFIER வழங்கப்பட்டது.அதிரை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்ல மூன்று சக்கர வாகனம், அதிரை பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ரேணுகா, திலகர் தெருவை சேர்ந்த சிறுவன் முஹம்மது பைசல் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. காதிர் முகைதீன் கல்லூரியில் MBA வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கல்வி உதவி தொகை  ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 3 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.சிறு தொழில் தொடங்குவதுக்காக 2 பெண்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்டது.மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author