நாளை துவங்குகிறது – 10ம் வகுப்பு பொது தேர்வு!!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தத்தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


எஸ்.எஸ்.எல்.சி தேர்வு:


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை(வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு 11 ஆயிரத்து 827 பள்ளிகளில் நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வை 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, தேர்வு மொத்தத்தில் 3 ஆயிரத்து 298 மையங்களிலும் நடக்கிறது.


சென்னையில் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 578 பள்ளிக்கூட மாணவர்கள், 209 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் எழுதுகின்றனர்.


புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வுகளை 291 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.


தேர்வை 9 ஆயிரத்து 703 மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் எழுதுகின்றனர்.


உடல் ஊனமுற்றோர்கள்:


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், மற்றும் சுடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டைப் போலவே, நான்கு சக்கர வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அதே வாகனங்களில், விடைத்தாள் கட்டுகளை, மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தேர்வு எழுதிய பின் என்ன எழுதினோம் என்று நண்பர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்ப்படலாம். தேர்வுக்கு பின் சந்தோசமான விஷயங்களை  நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் மனநிறைவோடு மீதமுள்ள தேர்வுக்கு ஆயத்தமாக உதவியாக அமையும்.

– அதிரை சாலிஹ்

Advertisement

Close