அதிரை-தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்து விபத்து!

அதிரை- தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்து இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டது .இந்த பேருந்தில் திருச்சி,தஞ்சாவூரில் படிக்கும் அதிரை மாணவர்கள் ஏராளமானோர் செல்வது வழக்கம் .இன்று காலை அந்த பேருந்து பட்டுக்கோட்டை பைபாசில் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் மீது மோதியது.இதில் அந்த வேன் நிலைதடுமாறி பைபாஸ் ரோட்டிற்கு அருகே இருந்த பாலம் மீது மோதியது.இதில் அந்த வேனில் சென்ற குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்ப்பட்டது.உடனே அருகில் இருந்தவர்கள் அந்த குழந்தைகளை மீட்டனர்.மேலும் அந்த சாலை அருகில் அந்த பாலம் இல்லாவிட்டால் மிக பெரிய விபத்து ஆகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள்.இந்த விபத்துக்கு முக்கிய காரணம் வேகம் தான் என்று கூறப்படுகிறது.  

Advertisement

Close