அதிரை இன்ஜினியரிங் மாணவர்களின் வியக்க வைக்கும் படைப்புகள்!(படங்கள் இணைப்பு)

திருச்சி M.I.E.T பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறையின் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் M.I.E.T பொறியியல் கல்லூரி நிறுவன தலைவர் முகமது யூனுஸ் மற்றும் துணை முதல்வர் முனைவர் அப்துல் ஜலீல் தலைமை ஏற்றனர்.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஹை எனர்ஜி பேட்டரிஸ் நிறுவனர் டி.ஜி.எம்.ராமசுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.   

மேலும் இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் குகராஜா பங்கேற்று எந்திரவியல் சார்ந்த உலகளாவிய வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு மாணவர்கள் எப்படி செயல்ப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார். எந்திரவியல் துறை தலைவர் முனைவர் குமாரவடிவேல் அவர்கள் மாணவர்களை வழி நடத்தும் வகையில் சில ஆலோசனைகளை வழங்கினார்கள் .   

இந்த நிகழ்ச்சியில் M.I.E.T.கல்லூரியில் எந்திரவியல் துறையில் நான்காம் ஆண்டு படிக்கும் அதிரையை சேர்ந்த சாலிஹ் அர்ஷத்,முஹம்மத் இஸ்மாயில், முஹம்மத் இப்ராகிம் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து கல்லூரியில் இருந்த பயன்படுத்த முடியாத பழைய பொருட்களை வைத்து  பைக்,கப்பல்,ஜெட் மற்றும் AIR CRAFT உருவாக்கினார்கள்.மேலும் இவர்களுக்கு அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எந்திரவியல் துறையில் படிக்கும் அதிரை மாணவர்கள்  உதவியாக இருந்தனர்.இவர்களின் படைப்புகளை பல்வேறு கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் வியப்புடன் கண்டு இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அதிரை பிறையும் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது. 

                       அதிரை கிழத்தெருவை சேர்ந்த சாலிஹ் அர்ஷத்

                          அதிரை C.M.P.லைனை சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் 

Advertisement

Close