மீண்டும் நோக்கியா NOKIA 1100 ஆன்டிராய்டில்..!

நோக்கியா நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்துடன் கைகோர்ப்பது உறுதியாகி விட்ட நிலையில், அடுத்த வருடம் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்டுடன் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யப்போவதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளது.
இதற்கு ’NOKIA 1100’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நோக்கியா நிறுவனத் தயாரிப்புகளில் மாபெரும் வெற்றிகரமான செல்போனாக கருதப்படும் அதே பெயரில் முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன் வெளியாக இருக்கின்றது.
இது 1.3GHz குவாட் ஃபோர் ப்ராசஸ்ருடன் வருகிறது. ஆனால், இதில் 512 MB RAM மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், 4 GB இன்டர்னல் மெமெரி கொண்டிருக்கும். டிஸ்ப்ளே ரெசல்யூசன் 1280*720p இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே போன்று 8MP பின்புற கேமரா இருக்கும் என்பது உறுதியானாலும், முன்புற கேமரா இந்த மாடலில் இருக்குமா என்பது சந்தேகமே..

Advertisement

Close