பள்ளிவாசல்கள் தரக்குறைவாக பேசிய சு.சாமியை கைது செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
பள்ளிவாசல்களை, கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்துத் தள்ளலாம்; அவை வழிபாட்டுத் தலங்கள் அல்ல… 
என நாட்டின் அமைதிக்கும், நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் விரோதமாக விஷமக் கருத்தினை வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி மீது சட்டப்பூர்வ முறையில் நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் தள்ளவேண்டும்.
இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழலில் ஒற்றுமையை சீர்குலைக்கும்விதமாக­வும், அரசியல் சாசன நெறிமுறைக்கு விரோதமாகவும் பேசியசு.சாமியை மத்திய அரசோ, மத்தியில் ஆளும் கட்சியோ ஆதரிக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு நேர்மையான முறையில் பதில் அளிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், அவர்களிடத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாகவும், நாட்டின் இறையாண்மையை நாசப்படுத்தும் நோக்கில் எழுதியும், பேசியும் செயலாற்றி வரும் மதநல்லிணக்க விரோதி சு.சாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க இன்னமும் தாமதித்தால் மக்களின் அதிருப்திக்கு மேலும் இலக்காக வேண்டி வரும். 
எனவே தாமதிக்காமல் சுப்ரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.
இவண்.
ஜெ.எஸ்.ரிபாயீ தலைவர், 
தமுமுக

Advertisement

Close