சில டீலர்கள் பைக்கின் புக்கிங்கை துவக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பஜாஜ் இன்னும் அதிகாரப்பூர்வமாக புக்கிங்கை துவக்கவில்லை. பல்ஸர் RS200 பைக் சுமார் 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

Advertisement

' />

விரைவில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் பல்ஸர் RS200 – டீஸர்!

பஜாஜ்-ன் முதல் ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்காக, விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது பல்ஸர் RS200. வெளிநாடுகளில் பல்ஸர் 200SS என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பைக்தான் இங்கு RS200 என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. பல்ஸர் RS200 பைக்குக்கான டீஸர் படங்களையும் நேற்று வெளியிட்டது பஜாஜ்.

‘Fastest Pulsar Yet’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது புதிய பல்ஸர் RS200. இதனால், 200NS பைக்கில் இருந்த அதே 199.5 சிசி (23.20 hp) இன்ஜின் இருந்தாலும், இந்த பைக்கில் அதிக சக்தியைத்தரும் என எதிர்பார்க்கலாம். டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டேடைம் ரன்னிங் லைட்ஸ், LED டெயில் லைட்ஸ் போன்றவை உள்ளன.

Close