விவசாயத்தை விழுங்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. இதன் விளைவு, கிராமங்களில் வேலைவாய்ப்பு குறைந்து, பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. இதன் காரணமாக நகரங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன.

விவசா யத்தை மட்டுமே நம்பியிருந்த கிராமங்களில் பருவ மழை ஆண்டுக்கணக்கில் பொய்த்து விட்டதால் விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக தரிசாக காட்சியளிக்கின்றன. இதை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகள் விளைநிலங்களை விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழகத்தின் பரவலான நிலை.

விவசாய நிலங்களை விற்க வேண்டும் என்றால் அதற்கு ஆயிரத்தெட்டு நடை.முறைகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் அதை விற்க ஒப்புதல் பெற வேண்டும். அடுத்து விவசாய நிலத்தை மனையாக அனுமதி பெற வேண்டும். இப்படி நடைமுறைகள் இருந்தாலும் வருவாய் துறையிலும், பத்திரப்பதிவுத்துறையினரில் சிலரை கவனித்தால் இதற்கான அனுமதி விரைவில் கிடைத்து விடுகிறது. பெரும்பாலான விளைநிலங்கள் உரிய அனுமதியில்லாமல் உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் கூறுப்போட்டும் விற்கப்படுகின்றன. 

இவ்வாறு தமிழகத்தில் பல ஏக்கர் விளைநிலங்களை விற்கப்பட்டுவிட்டன. இப்போது அவை அடுக்குமாடி குடியிருப்புகள், பிரமாண்ட வணிகவளாகங்கள், தொழிற்சாலைகள் என பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கின்றன. அனுமதியில்லாமல் வீட்டு மனைகள், வீடுகளை வாங்கி பிறகு அவஸ்தைப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். விளைநிலங்கள் அனைத்தும்  விற்று மனைகளாக்கப்பட்டால் வெளிநாடுகளில் உணவுக்கு கை ஏந்தும் நிலை அபாயம் ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “விவசாய நிலத்தைப் பொறுத்தவரைக்கும் அதற்கென தனிப்பாதை (வழி) வசதிகள் இருக்காது. வாய்க்கால்வரப்பு வழியாகத் தான் ஒவ்வொருவரும் தங்களுடைய விவசாய நிலத்துக்கு செல்வார்கள். இந்த நடைமுறை சிக்கல்களை தெரிந்து கொள்ளும் சில ரியல்எஸ்டேட் அதிபர்கள் பாதையையொட்டி அமைந்துள்ள விளைநிலங்களை முதலில் என்ன விலை என்றாலும் வாங்கிவிடுவார்கள். பிறகு அந்த நிலத்தை சுற்றி யாருமே செல்ல முடியாத அளவுக்கு வேலியால் அடைத்து விடுவார்கள். அந்த இடத்துக்குப் பின்னால் இருக்கும் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத  நிலை ஏற்படும். 

இதனால் வேறுவழியின்றி சம்பந்தப்பட்ட அந்த ரியல் எஸ்டேட்டினர் கேட்கும் விலைக்கு மற்ற விவசாயிகள் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது ஒரு வகை. இன்னொரு புறம், மழை இல்லாததால் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் வறுமையில் வாடும் விவசாயிகள், குறி வைத்து இடங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்கும் கும்பல் தமிழகம் முழுவதும் உள்ளது.

நகரப்பகுதிகளை பொறுத்தவரைக்கும் அதையொட்டி இருக்கும் கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என காரணங்களுக்கான அவைகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இது விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விகுறியாக்கி விடுகிறது. இவ்வாறு விளைநிலங்கள் வீடுகளாக மாறி வருவதால் உணவு உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்படும். அடுத்துவரும் சந்ததியினருக்கு உணவு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு வெளிநாடுகளில் கைஏந்தும் அபாயம் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “விளைநிலங்களின் பரபரப்பளவு குறை வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ரியல் எஸ்டேட் என்பதை மட்டும் காரணம் சொல்ல முடியாது. விளைநிலங்கள் குறுகினாலும் உற்பத்தி ஆண்டுந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு உற்பத் தியில் பாதிப்பு ஏற்படாது” என்றார்.

சமூக சேவகர் பொன்சேகர் கூறுகையில், “சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங் களில் இருந்த விவசாய நிலங்கள் இன்று அழிக்கப்பட்டு வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகும் காட்சியளிக்கின்றன. விவசாயத்தை வைத்தே, நாட்டின் முதுகெலும்பு கிராமம் என்று கூறினார்கள். ஆனால் இன்று முதுகெலும்பு இல்லாத நாடாக நம் நாடு மாறிக்கொண்டிருக்கிறது. 

பசுமை புரட்சி போல மகசூலை அதிகரிக்க பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகும் உணவுகளை சாப்பிட்டு பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். விளைநி லங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் இல்லாத நிலங்களை மட்டுமே விற்க அனுமதி கொடுக்க வேண்டும்” என்றார்.

ரியல் எஸ்டேட் தரப்பினர், “முறையாக அனுமதி பெற்றே அந்த இடங்களை வாங்கி வீடுகளாக மாற்று கிறோம். எந்த விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அவ்வளவு எளிதில் அபகரிக்க முடியாத அளவுக்கு சட்டங்கள் இருக்கின்றன” என்றனர். 

அரசின் கொள்கை விளக்க குறிப்பில், “1960 & 61ம் ஆண்டில் 42,46 சதவிகிதமாக இருந்த வேளாண்மையின் பங்கு 2009 & 2010ல் 7.5 சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் விவ சாயம். தமிழகத்தின் சராசரி மழையளவு ஆண்டுக்கு சுமார் 920 மி.மீட்டர். 2001&2002ம் ஆண்டில் 62.26 லட் சம் ஹெக்டேராக இருந்த சாகுபடி பரப்பு 2011&2012ம் ஆண்டில் 58.90 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 

இதே போன்று 2001&02ம் ஆண்டில் 120 சதவிகிதமாக இருந்த பயிரிடுதிறன் 2011&12ல் 118 சதவிகிதமாக குறைந்துள்ளது. இருப்பினும் 2011&12 ம் ஆண்டு 101.52 லட்சம் மெட்ரிக் டன்  உணவு தானிய உற்பத்தி செய்து தமிழகம் சாதனை புரிந்துள்ளது. இதற்காக மத்திய அரசின் கிரிஷ்கர்மான் விருது வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறுகையில், “சி.எம். டி.ஏ., டி.டி.சி.பி அனுமதியில்லாமல் வீட்டு மனைகளை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். விளை நிலங்கள் வீடுகளாக மாற்றப்படுவதில் 30 சதவிதம் மட்டுமே உரிய அனுமதி பெற்று விற்கப்படுகிறது. 

மீதமுள்ளவைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதியுடன் விற்கப்படுகின்றன. இந்த நடைமுறை தவிர்த்தால் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது குறையும். ஆண்டுக்கு தமிழகத்தில் சுமார் 2 லட்சம் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன” என்றார். 

விவசாய உற்பத்தி அதிகரித்தால் நாடு வளர்ச்சியடையும்….அரசு விழிக்கவேண்டிய தருணம் இது !

– எஸ்.மகேஷ்
    
Courtsey: vikatan

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author