சவூதியில் பாங்கு, பெருநாள், மழை, ஜும்ஆ தொழுகையைத் தவிர பிறவற்றிற்க்கு வெளி ஒலிபெருக்கியை உபயோகிப்பது நிறுத்தம்!

வெள்ளிக்கிழமை ஜீம்ஆ தொழுகை, இரன்டு பெருநாள் தொழுகைகள் தவிர மற்ற தொழுகைகளுக்கு பள்ளிவாசல்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் இசுலாமிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களக்கு அருகில் வசிக்க கூடிய மக்கள் பள்ளிவாசல்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளால் தங்களுக்கு தொல்லையாக உள்ளது என புகர் அளித்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், இமாம்களும் பள்ளிவாசல்களில் அரசாங்க முன் அனுமதியில்லாமல் எக்கோ ஒலிபெருக்கிகளையும், கட்டர் ஆம்பிளிபையர்களையும் பொருத்தவோ , மோடிபை செய்யவோ கூடாது என சவுதி அரசு எச்சரிக்க விடுத்தள்ளது,

பள்ளிவாசல்களையும், இமாம்களையும் கண்கானிக்கு அரசு பணியாளர்களை நியமித்துள்ளது. முறையாக அரசு உத்தரவு செயல்படுத்த படுகிறதா என இவர்கள் கண்காணிப்பார்கள்.

ரமழான் மாதத்தில் பள்ளிகளில் நீண்ட நேரத்திற்கு தொழுகை நடத்த கூடாதென்றும், பிரசங்கம் செய்ய கூடாதென்றும், ராகம் போட்டு இழுத்து ஓத கூடாது என்றும் பள்ளிவாசல் இமாம்களுக்கு சவுதி அரசாங்கள் கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளது.

சவுதி அரேபியா முழுவதும் பள்ளிவாசல்களில் இமாம்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட உரைகளையும், பிரசங்கங்களையுமு் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், சுயமாக எதுவும் பிரசங்கம் செய்யவோ பேசவோ கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களிலும், மதரசாக்களிலும் குர்ஆன் ஓதுவதற்கும் , கற்பிப்பதற்கும் கடினமான சட்டதிட்டங்களை சவுதி அரசு பிறப்பித்துள்ளது. அவற்றை மீறி குர்ஆன் வகுப்பக்கள் நடத்தினாலோ பிரசங்கித்தாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்கள் அனைத்திலும் உம்முல் குரா வில் கூறப்பட்டுள்ளபடி ஒரு நேரத்தில்தான் பாங்கு சொல்ல வேண்டுமு் எனவும் மாற்றி சொல்லவோ நேரம் மாற்றி தொழுகை வைக்கவோ கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்கள், மதரசாக்கள் மூலம் பரப்பபடும் கருத்தியல் ரீதியான தீவிரவாதம், மதவாதத்தை கட்டுப்படுத்த 10 புதிய ஏஜென்சிகளை நியமித்து அதன் மூலம் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், இமாம்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் எச்சிரித்துள்ளது.

நன்றி : அரப் நியூஸ் பத்திரிக்கை தேதி : 06.06.2015

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close