வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஐசிஐசிஐ-யின் புதிய சேவை!

பஹ்ரைனில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் பணம் அனுப்புவதற்கு வசதியாக, ‘டச் இன் ரெமிட்’ என்ற சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பஹ்ரைனில் உள்ள, ‘சதாத் எலக்ட்ரானிக் பேமென்ட்ஸ் டபிள்யூஎல்எல்’ என்ற நிறுவனத்துடன் ஐசிஐசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள், ‘சதாத் எலக்ட்ரானிக் பேமென்ட்ஸ் டபிள்யூஎல்எல்’,ன் கணிப்பொறியகங்கள் மூலம் இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்கு உடனடியாக பணம் அனுப்ப முடியும்.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இல்லை என்றாலும் அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்த சேவையை பெறமுடியும். அதே போல பணம் பெற்றுக்கொள்ளும் பயனாளி ஐசிஐசிஐ வங்கியின் பஹ்ரைன் கிளைக்குச் சென்று ஒரே ஒருமுறை பதிவு செய்து கொள்ள வேண்டும். சதாத் கணிப்பொறியகங்களுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவில் உள்ள ஐசிஐசிஐ உள்பட 100க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு பணம் அனுப்பமுடியும். ‘எங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை அளிப்பதில் புதிய முறைகளை கண்டறிந்து செயல்படுத்தி வருகிறோம்’ என்று ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் விஜய்சந்தோக் கூறினார்.

Advertisement

Close