அதிரை 21வது வார்டு செட்டித்தோப்பில் தொடரும் கால்வாய் பிரச்சனை!

அதிரை 21வது வார்டு செட்டித்தோப்பு பகுதியில் பல நாட்களாக கால்வாய் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை அடுத்து நமக்கு நாமே திட்டம் மூலம் கால்வாய் பிரச்சனையை சரி செய்வதற்க்காக கால்வாய் மேல் மூடியுள்ள உள்ள கற்கள் திறக்கப்பட்டு பாதையில் போடப்பட்டது. இது நடந்து சில வாரங்களுக்கு மேல் ஆகியும் இந்த கால்வாய் பிரச்சனையை சரி செய்யவில்லை எனவும் பாதையில் கிடக்கும் கால்வாய் மூடு கற்களால் பாதை செல்வது கடினமாக உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இப்பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் அப்பகுதியில் இப்பிரச்சனையை விரைந்து சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close