வெளியூர்களில் தங்கி வேலை தேடும் அதிரை இளைஞர்களுக்கு அதிரை பிறையின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

அதிரையை சேர்ந்த இளைஞர்கள் பலர் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் தங்கி படித்தும் வேலை தேடியும் வருகின்றனர். இது போன்ற பெரு நகரங்களின் முக்கிய இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். 

இந்த சுவரொட்டிகளில் எந்தவொரு நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படாமல் நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு மாதம் 20000 சம்பளம், ஞாயிற்று கிழமை வேலை செய்பவர்களுக்கு மாதம் 3000 சம்பளம், பகுதிநேரமாக வேலை செய்பவர்களுக்கு 12000 சம்பளம். என்று எழுதப்பட்டு முன்பதிவு செய்பவர்கள் 300 ரூபாய் கொடுத்து செய்து இந்த இடத்தில் கொடுத்துக்கொள்ளவும். மேலும் தொடர்புக்கு என்று 2 செல்பேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

இப்படி கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கொண்ட வேலைவாய்ப்பை கண்ட நமது இளைஞர்கள் 300 ரூபாய் அளித்து முன்பதிவும் செய்து விட்டு  ஒரு வாரம் கழித்து தொடர்புகொண்டால் ஒரு நபர் நீங்கள் வேலைக்கு தேர்வாக வில்லை என்று கூறுவார். அதுவும் இல்லையென்றால் அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது என்று வரும். 

பல கஷ்டங்களுடன் ஊரை விட்டு வேறு ஊருக்கு வந்து வேலை தேடி அலையும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றுவதற்க்காக பலர் குழுவாக இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முதல் குறி வேலை தேடும் அப்பாவி இளைஞர்களும், பகுதி நேர வேலை தேடும் கல்லூரி மாணவர்களுமாகும். பலரது முன்பதிவு பணத்தை பெற்ற பிறகு ஒரு பெரிய தொகை சேர்ந்தவுடன் கிடைத்த பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு ஓடி விடுவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

வேலை தேடி அலையும் இளைஞர்கள் தமிழகத்தில் அஅதிகரித்து வரும் அதே வேலையில் அவர்களை ஏமாற்றுவதற்க்காக வரும் மோசடி கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. இவர்களை இனம் கண்டு எச்சரிக்கையாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close