பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற கல்லூரி நாள் விழா!

Want create site? Find Free WordPress Themes and plugins.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்
கல்லூரியில் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி நாள் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்
சங்கத் தலைவர் சகுந்தலா சோமசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழுத் தலைவர்
ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துவேலு ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், கல்லூரி இயக்குநர் துரைமாணிக்கம், சாந்தாங்காடு
ஊராட்சி தலைவர் கவிதா சரவணன், முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் அசோக்ராஜ் வாழ்த்துரை
வழங்கினர். விழாவில் பேச்சரங்க இயக்குநர் அண்ணா சிங்காரவேலு சிறப்புரையாற்றினார். விழாவில் விளையாட்டு,
கல்வி மற்றும் பல்துறையில் சிறந்து விளங்கிய இயந்திரவியல்துறை மாணவர் எஸ்.நாடிமுத்து,
அமைப்பியல்துறை மாணவி கே.சிந்துமதி, மின்னியல்துறை மாணவர் ஜி.தவச்செல்வன் ஆகியோருக்கு
அய்யா எஸ்.டி.எஸ். விருது, பதக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இயந்திர மின்னணுவியல்துறை
தலைவர் கே.மீனாட்சிசுந்தரத்திற்கு நல்லாசிரியர் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்ற ஆசிரியர்களான லீலாவதி, வனஜா, அருண்குமார், விஜயராகவன்,
வின்சென்ட், சிவகுமார், ராமதாஸ் ஆகியோருக்கு தங்க நாணய பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு
டிப்ளமோ நிறைவு செய்து சென்ற மாணவர்களில் ஒவ்வொரு துறையிலும் இறுதி பருவத்தில் முதல்
மதிப்பெண் பெற்ற வேல்முருகன், முத்துகணேஷ், கௌதமன், வினோத்குமார், ஆரிப்முகமது, ஜெயசாரதா
ஆகியோருக்கு அய்யா எஸ்.டி.எஸ். தங்கப்பதக்கமும், 2ம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கார்த்திக்,
கவியரசன், இளஞ்சேரன், சரண்யா, அருள்ஜேம்ஸ்ஏசுதாஸ், ஆர்.ஐஸ்வர்யா ஆகியோருக்கு வெள்ளிப்
பதக்கமும் வழங்கப்பட்டது. பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்
லோகேஷ், சிந்துமதி, ரூபன், கௌதமன், அலெக்சாண்டர், விக்னேஷ் ஆகியோருக்கு சென்டம் அவார்டு
மற்றும் காசோலை ஆகியன எஸ்.டி.எஸ்.அறப்பணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. 2 ம் ஆண்டு  இயந்திர மின்னணுவியல்துறை மாணவர் வெங்கடேசன் கல்லூரி மற்றும் கல்லூரி
நிறுவனர் எனும் தலைப்பில் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டது. 

நிகழ்ச்சிகளை
முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீதரன், ராஜன் தொகுத்து வழங்கினர். அமைப்பியல்துறை மாணவர்
ஹரிஹரன் வரவேற்றார். இயந்திரவியல்துறை மாணவர் நீலகண்டன் நன்றி கூறினார்.

-தினகரன்

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author