நாகா இன மக்களால் அடித்தே கொல்லப்பட்ட பரீத் கானின் மூச்சு காற்று!

ஆம் நான் தான்! நானே தான்!!
நான் நாக இன மகளை கற்பழித்தேன் என்கிறது ஊடகம். ஆனால் மருத்துவ பரீசோதனை நான் அவளை அடையவில்லை என்கிறது.
நான் குற்றவாளி இல்லை என்கிறார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்.
இருந்த போதும் என்னை கைவிட்டு வேடிக்கை பார்த்தது காவல் நிலையம்.
நாட்டுக்காக போராடிய வாரிசின் மகனை அந்நிய நாட்டு பங்களதேசி என்றது என் நாட்டின்  பொறுப்புள்ள ஊடகம்
உடன் பிறந்த ஐந்து பேரில் நான்கு பேர் ராணுவதில் இருந்த போதும் நான் அந்நிய நாட்டுக்கரன் என்று இன்று வரை சந்தேகம்
கார்கில் போரில் நெஞ்சில் குண்டு அடிபட்டு வீரமரணம் அடைந்தான் என் சகோதரன். இருந்த போதும் நான் மற்றவர்கள் பார்வையில் என் நாட்டுக்குள் கள்ளத்தனமாக குடியேரியவன்
நடு ரோடில் நிர்வாணமாக பல பேர் முன்னால் அடித்து என் உயிரை பிடுங்கி எரிந்தீர்கள்.
ஆனால் கற்பழித்தவர்கள் எல்லாம் கைகளில் கத்தியுடன் பவணி வருகையில், செய்யாத குற்றத்திற்கு என்னை சின்னாபின்ன படுத்திவிட்டீர்கள்
நான் முஸ்லீமாக பிறந்து, இந்த நாட்டுக்காக தியாகம் செய்து, இன்றுவரை அத்தியாகத்தை செய்துவருகின்ற குடும்பதில் பிறந்ததால் எனக்கு தரப்பட்ட ஒருதலைபட்சமான தீர்ப்பா இது?
இந்திய தேசத்தில் முஸ்லீமாக வாழ்வது குற்றமா? என்று எண்ணத்தை ஏற்படுத்த முனைகிறீர்கள். நீதிக்கு முன்னால் அநீதி ஒரு நாள் மண்டியிடும் மறந்து விடாதீர்கள்
என் உயிர் கதறி துடித்து என் தேகத்திலிருந்து பறிக்கப்பட்டது போன்று மற்றொரு அப்பாவியின் உயிர் இனி என் தேசத்தில் பிரிய வேண்டாம்
இனியவாது காப்பற்றுங்கள் என் தேசத்து நீதியை, என் தேசமக்களின் சுதந்திரத்தை, என் சமூக மக்களின் பாதுகாப்பை, என் நாட்டு இறையான்மையை…
மறந்துவிடாதீர்கள் என் தேசத்திற்கு பெருமை தேடி தரும் மதசார்பின்மையை
இப்படிக்கு, முன்னால் இந்திய ராணுவ வீரனின் மகன், இன்னால் இந்திய ராணுவ வீரர்களின் சகோதரன் – சையது பரீத் கான்
-கரையில் இருந்து இஸ்ஹாக் (தூது வாசகர்)

Advertisement

Close