அதிரையர்கள் லண்டனில் பர்மாவுக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ப்பு! (படங்கள் இணைப்பு)

பர்மாவில் கடந்த ஒருமாதமாக பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டை சேர்ந்த 969 என்ற அமைப்பினரால் கொல்லப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் நடுக்கடலில் தவிக்கவிடப்பட்டும், அவர்களின் வீடுகளை இடித்தும், குழந்தைகளை கொன்றும் பலவாறு கொடுமை படுத்திவறுகின்றனர். இதனை எதிர்த்து சில நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளும், ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் இந்த கோர படுகொலைகளை எதிர்த்து 969 என்ற அமைப்பையும் இதனை கண்டுக்கொள்ளாத பர்மா அரசைக் கண்டித்தும் இங்கிலாந்து அரசாங்கம் கண்டன் தெரிவிக்க வலியுறுத்து லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் கலந்துக்கொண்டு பர்மா அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close