நியூயார்க்கில் முதன் முதலில் நோன்பு பெருநாளுக்கு விடுமுறை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அமெரிக்காவில் மிகப்பெரிய மாகாணமான நியூயார்க்கில்  இந்தாண்டு இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

MAYOR BILL DE PHILOSHIYO இதை அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சமுதாயம் என்பதால் அவர்களின் நம்பிக்கையை அமெரிக்கா கவுரவப்படுத்த விரும்புகிறது. அதனால் நோன்பு பெருநாள் தினம், பள்ளி விடுமுறை தின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
  
எனினும், இத்தனை ஆண்டுகள் விடுமுறை தினமாக பள்ளி பட்டியலில் இருந்த தீபாவளி பண்டிகை தினத்தை மேயர் நீக்கியுள்ளார்.

இது அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் குழந்தைகள் பாரம்பரிய கலாசார பெருமையை தொடரவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இங்கு வந்தும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். நியூயார்க்கில் இதற்கு முன் இருந்த மேயர்கள், தீபாவளி பண்டிகையை விடுமுறை பட்டியலில் நீக்கவில்லை.

முதன் முறையாக இது நடந்துள்ளது. நாங்கள் எவ்வளவோ கேட்டும் மேயர் PHILOSHIYO ஏற்கவே இல்லை என்று இந்து மக்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்துக்கள், சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர்.

அப்படியிருக்கும் போது தீபாவளிக்கு விடுமுறையை ரத்து செய்தது சரியல்ல என்று அமெரிக்க இந்து அமைப்பின் இயக்குனர் ஷீத்தல் ஷா கூறியுள்ளார்.

தீபாவளியை மீண்டும் விடுமுறை தின பட்டியலில் சேர்க்க நியூயார்க்கில் உள்ள 40 அமைப்புகள், இந்து கோயில்கள் நிர்வாகங்கள் சேர்ந்து கூட்டாக மேயரிடம் மனு கொடுத்துள்ளனர். இதனிடையே, முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. எங்கள் நோன்பு பெருநாளை  விடுமுறை தினததினத்தில் சேர்த்து உலகளாவிய சமூகத்திற்கு கவுரவம் செய்தது திருப்தியாக இருக்கிறது’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author