அதிரையில் 24 மணி நேர மருத்துவரை நியமிக்க சேர்மன் அஸ்லம் மனு!

சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது. 

இன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களால் அதிரை அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேர மருத்துவர்களையும் நியமிக்க மனு வழங்கப்பட்டது. அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் இந்த முயற்சி வெற்றியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Close