அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரவு!

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்து தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வரும் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் திட்டங்கள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட அனைத்து குடிநீர் ஆதாரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை குடிநீர் வடிகால் வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Close