இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சுற்றி வர சோலார் விமானம் அபுதாபியிலிருந்து இன்று புறப்பட்டது!

Want create site? Find Free WordPress Themes and plugins.

முதல் முயற்சியாக உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 617 மணி நேரம் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டு துளியளவும் எரிபொருள் உபயோகிக்காமல் முழுக்க‌ சூரிய சக்தியில் இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று காலை அபுதாபியிலிருந்து மஸ்கட் நோக்கி கிளம்பியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை அபுதாபியில் நடைபெற்றது.உலகை சுற்றிவர புறப்பட்ட இந்த விமானத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ளனர். ஒருவர் மட்டும் அமரக் கூடிய இந்த விமானத்தில் முதன் முறையாக உலகத்தை சுற்றிவரும் முயற்சியாக இன்று காலை பயணத்தை தொடங்கினர்.

மஸ்கட்டை அடைந்த பின்னர் அங்கிருந்து இந்தியாவின் அஹமதாபாத் வருகிறது. பின்னர் அங்கிருந்து வாரானாசி வருகை தர உள்ளது .மேலும் சீனா, பசிபிக் கடல், ஐரோப்பா மற்றும் வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு மேலே பறந்து ஜீலை மாதம் அபுதாபியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானத்துக்கு எரிபொருள் தேவையில்லை. காற்றை மாசுபடுத்தும் புகையை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது. கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் விமானத்தின் இறகுகளின் நீளம் 72 மீட்டராகும். இது போயிங் 7478ஐ ரக விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும், 2,300 கிலோ எடை உடையதாகும். இந்த விமானத்தில் 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ் பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.அபுதாபியில் உள்ள மடசார் தனியார் நிறுவனமும் இப்பயண திட்ட பணிகளில் இணைந்து பணியாற்றியுள்ளது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author