அதிரை பிறை நேயர்களுக்கு அதிரை பிறையின் மனமார்ந்த நன்றி

அதிரை பிறை இணையதளம் மீண்டும் செயல் பட துவங்கியுள்ளது. இணையதளம் முடங்கியவுடன் எங்களை தொடர்புகொண்டு ஆறுதல் அளித்த அனைத்து உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை பிறை நேயர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதுபோல் அதிரை பிறை முடக்கத்தை சரி செய்த ஜாஃபர் மற்றும் தமீஜுத்தீன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒரு இணையதளம் தன்னைவிட வளர்கிறது என்றால் அதை வீட புதிதாக என்ன என்ன முயற்சிகள் எடுத்தால் உயரலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அதை விட்டு அத்துடன் அந்த இணையதளத்தை முடக்கி தான் வளர வேண்டும் என்று எண்ணுவது கோழைகளின் அடையாளம். 

அவர்களே ஒரு குற்றத்தை செய்து விட்டு அவர்கள் தளத்திலேயே செய்தி பதிவார்களாம். படிக்கும் மக்கள் என்ன முட்டாள்களா? இவர்கள் எங்களுக்கு செய்த துரோகங்களுக்கெல்லாம் நாங்கள் பொறுமையாக இருந்தோம். அல்லாஹ் எங்களுக்கு உதவி புரிந்தான்.

இனி வரும் காலங்களில் அதிரை எக்ஸ்பிரஸ் இந்த தவறை  செய்யாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்.

                                  இப்படிக்கு, 
                               அதிரை பிறை 

Advertisement

Close