அதிரை பிறையில் செய்தியாளராக இணைந்து எங்களுடன் பயணிக்க விருப்பமா???

registrationஅதிரை பிறை இணையதளம் தற்போது 6 வது ஆண்டில் செயல்பட்டு வருகிறது. பல இளைஞர்கள் இதன் மூலம் செய்தி சேகரிப்பு, செய்தியாக்கம், புகைப்படக்கலை உள்ளிட்ட பலவற்றை கற்றுள்ளனர். மீடியா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்துவதற்க்கும் இது ஒரு முதல் படியாக அமையும்.

இந்த தளம் மூலம் பல தரப்பட்ட செய்திகளை வழக்கமான பானியில் அல்லாமல் வித்தியாசமான பானியில் வழங்கி வருகிறோம். மேலும் இதில் வீடியோ பதிவுகள், கருத்துக்கணிப்புகள், லைவ் நிகழ்ச்சிகள், LISTEN PIRAI என்னும் பெயரில் FM ஆடியோ செய்திகள் என பலதரப்பட்ட வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்பது நீங்கள் அறிந்தவையே!!!!

இதில் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றதொரு நல்ல நோக்கத்துடன் தற்போது செய்தியாளர்கள், எழுத்தாளர்களை, புகைப்பட கலைஞர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நமது அதிரை பிறையில் நீங்கள் எங்களுடன் இணைந்து பயணிக்க விருப்பமா???

கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

விதிமுறை 1: 16 வயதிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

விதிமுறை 2: சிகிரெட், மதுப்பழக்கங்கள் இருக்க கூடாது.

விதிமுறை 3: அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களை சாராதவராக இருக்க வேண்டும்.

விதிமுறை 4: பொழுதுபோக்கிற்காக அல்லாமல் ஆர்வத்துடன் பணியாற்றுபவராக இருத்தல் அவசியம்.

Close