சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட மதுக்கூர் மைதீன் சிகிச்சை பலனின்றி மரணம்!

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீனை இன்று இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை கொண்டு செல்லப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கை, கழுத்து, தலை பகுதிகளில் பலத்த வெட்டுக்கள் விழுந்து அதிகளவில் இரத்தம் வெளியேறிய நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Close