துபாயில் கலக்கிய அதிரை கிரிக்கெட் கிளப் (ACC) அணியினர்! (படங்கள் இணைப்பு)

துபாயில் கடந்த 2 மாதங்களாக 8 தலைசிறந்த அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் அதிரை கிரிக்கெட் கிளப் (ACC) அணியினர் கலந்துகொண்டு விளையாடி வந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அந்த அணியினர் வோஸ்டாக் அணியை எதிர்த்து விளையாடினர். பரபரப்பான இப்போட்டியில் வோஸ்டாக் அணியினர் வெற்றிபெற்றனர். இதன் மூலம் அதிரை ACC அணியினர் இரண்டாவது பரிசை கைப்பற்றினர்.

இனிவரும் காலங்களில் ACC அணியினர் மேலும் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வெல்ல அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close