Adirai pirai
  • Home
  • நாங்கள் யார்?

நாங்கள் யார்?

Noorul ibn Jahaber Ali

அதிரை பிறை சிறு குறிப்பு…

அதிரை பிறை இணையதளம் 6ம் ஆண்டில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 5 அண்டுகளுக்கு முன்னர் ரமலான் தலைபிறை அன்று துவங்கப்பட்டது.

அதிரையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உண்மை தண்மை மாறாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம். துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது. 05 வருடங்களில் இதுவரை 10 ஆயிரம் செய்திகளை நெருங்கவுள்ளோம். வெறும் செய்திகளை மட்டும் தராமல் உள்ளூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவிலான நிகழ்வுகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி அறிவுரைகள், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், அதிரை புகார்கள், அயல் நாட்டில் வாழும் அதிரையர்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், விளையாட்டு செய்திகள் போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது.

 

நாம் பதியும் புகார் சம்பந்தமான செய்திகளை வெறும் செய்திகளாக பதியாமல் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அன்புடன் கோரிக்கையாக அளித்து ஒரு சில பகுதிகளில் அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொருப்பில் உள்ளவர்கள் நண்மை செய்தால் பாராட்டுவதும், சரி இல்லையெனில் கண்டிப்பதையும் வழக்கமாக இந்த தளம் கொண்டுள்ளது.

 

“நீதி” என்ற ஒற்றை வார்த்தை தான் அதிரை பிறையின் கொள்கையாக கொண்டுள்ளோம். PIRAI TUBE, DR. PIRAI, மண்டே மசாலா, LAWYER PIRAI, LADIES CARE, சுட்டீஸ் பிறை, சிந்தனை சிறகுகள், போன்ற வித்தியாசமான தலைப்புகளின் கீழ் காணொளிகளையும் மருத்துவக் குறிப்புகளையும், ஊரில் தற்சமயம் நடைபெறும் நிகழ்வுகளையும், பல்சுவை தகவல்களையும் பதிந்துள்ளோம்.

 

அதிரை அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளித்து நமது இளைஞர்களை ஊடகத்துறையில் இதன் மூலம் மிளிரச்செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது போன்று எந்தவொரு லாப நோக்கமும் இன்றி அதிரை மக்களுக்கு இந்த அதிரை பிறை என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களாக சேவையாற்றி வருகிறோம்.

 

அதிரை பிறை வளர்ச்சிகளுக்கு மத்தியில் பல்வேறு சோதனைகளையும் சந்தித்துள்ளது. இணையதள பக்க முடக்கம், முகநூல் பக்கங்கள் முடக்கம், மிரட்டல்கள், அவதூறுகள் என பல சோதனைகள் எதிர்த்து போராடி சாதனைகளாய் மாற்றவே முயன்று வருகின்றோம்.

மேலும் அதிக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒரு ப்ரொஃபசனல் செய்தி தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள நமது தளத்தில் அனைத்து செய்திகளையும் தலைப்பு வாரியாக காணும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தளம் மூலம் மொபைல் பயனர்களும் இலகுவாகவும் கணிணியில் பயன்படுத்துவதைப் போன்று மொபைலிலும் பயன்படுத்தலாம். மேலும் பழைய தளம் போன்றில்லாமல் இது மிக வேகமாக செய்திகளை பார்ப்பதற்க்கும் படிப்பதற்க்கும் வசதியாக இருக்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆன்டிராய்டு மொபைல் பயனர்கள் இதனை எளிதாக உபயோகிக்க அப்லிகேசனும் உருவாக்கப்பட்டது. நமது தளத்தினை அதிரை மட்டுமல்லாமல் வெளியூர் வாசிகளும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

நாங்கள் பதியும் அனைத்து செய்திகளையும் படித்து தவற்றை சுட்டிக்காட்டியும் நல்லதாக இருந்தால் ஆதரித்தும் வரும் அதிரை பிறை நேயர்களுக்கும் தங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும் புகார்களையும் எங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் வாசகர்களால் தான் நமது தளம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.

அதிரை பிறையில் செய்தியாளராக, செய்தி பதிவாளராக, போட்டோகிராபராக அல்லது உறுப்பினராக இணைய விருப்பம் உள்ளவர்கள், விளம்பரம் தர விரும்புபவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

செல்: 9597773359

மெயில்: [email protected]

பேஸ்புக்: facebook.com/adiraipiraibook

ட்விட்டர்: twitter.com/adiraipirai

[contact-form-7 id=”44194″ title=”தொடர்புக்கு”]