அதிரை கடற்கரைத் தெரு வடிகால் சுத்தம் செய்யும் பணி(படங்கள் இணைப்பு)

அதிரையில் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலைய பணிகள் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் இருந்து செல்லும் கழிவு நீர் வடிகால் அடைப்பட்டது. இதன் காரணமாக கழிவு நீர் ஒரே பகுதியில் தேங்கி நிற்கிறது. அத்துடன் சில நாட்கள் கழித்து பெய்த கனமழையால் வடிகால் நிரம்பி கழீவு நீரும் கலந்து அப்பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிகரித்து டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவியது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அதிரை கடற்கரை தெரு முஹல்லா மற்றும் தீனுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினர், முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களுடன் அதிரை பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலரிடம் மனு வழங்கினர். இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி பேரூராட்சியால் தொடங்கப்பட்டது.

Close