களத்தில் இறங்கிய கடற்கரைத்தெரு இளைஞர்கள்..!

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கடற்கரைத்தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கும் இடம் தர்கா வளாகம் மற்றும் பெண்கள் மதரஷா ஆகிய பகுதிகள்..இந்நிலையில் பல நாட்களாக மழையில் ஊரி கிடந்த குப்பைகளும் அல்லப்படாமல் ஆங்காக்கே சிதறியும் வாய்க்காலிலும் கிடந்தன…..இதனால் வாய்க்காலில் மழைநீரும்,கழிவுநீரும் நிரம்பி சாலை பகுதியில் ஆறு போல் ஓடி தண்ணீர் தேங்கும் இடமாக கருதபடும் அவ்விரண்டு பகுதியிலும் தேங்கி நின்று பார்ப்பதற்கு அறுவறுப்பாக இருந்தன..இந்த வழியாக தான் பள்ளிவாசலுக்கு செல்பவர்களும்,பெண்கள் மதரஷாக்கு செல்பவர்களும்,பள்ளி குழந்தைகளும் அனைவரும் கடந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு கடற்கரை தெரு சகோதர்கள் முன்வந்து இவ்வேலையை செய்ய முடிவு செய்தனர் பிறகு பெண்கள் மதரஷாவை சுற்றிருந்த குப்பைகள்,கற்கள் அதிகளவில் இருந்தது அதையும் சுத்தம் செய்து அந்த கற்களை கொண்டு தேங்கிருந்த தண்ணீர் மேல் கொட்டி பாதையை சரிசெய்தனர்..மீதமுள்ள வடிகால் பிரச்சனையை பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்து தருமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம் இளைஞர்கள்,சகோதரரகள் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறார்கள்…….t

Close