அதிரை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் – இளைஞர் அப்துல் மஜீதின் புதிய முயற்சி!

அதிரை மக்களுக்கு குறைந்த விலையில் ஆங்கில மருந்துகளை (Generic Medicine) வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதிரையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அப்துல் மஜீத். அதற்கான மருந்தகம் துவங்க சுமார் 2 லட்சம் ரூபாய்குறிய பொருளாதாரம் இல்லாததால் இவர் பயன்படுத்திய புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட துவங்கி உள்ளனர்.

இன்று முஹைதீன் ஜும்மா பள்ளி வாயிலில் தங்களது புத்தகங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். பொதுமக்களும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். மருந்தகம் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த இளைஞர்களுக்கு நேரடியாக நீங்கள் உதவி செய்ய விரும்பினால் பின் வரும் எண்ணிற்கு அழையுங்கள்

அப்துல் மஜீது-7200130493.

Close