Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து தொடரை வெற்றியுடன் தொடங்கிய அதிரை AFFA U13 அணி (படங்கள் இணைப்பு)

அதிரையின் தலைசிறந்த கால்பந்து அணிகளுள் ஒன்றான AFFA அணி அடுத்த தலைமுறை கால்பந்து வீரர்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொடங்கி இருக்கும் 13 வயதுக்கு உட்பட்டோர், 15வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக AFFA இளம் அணியினர் இன்று காலை நெய்வேலி புறப்பட்டு சென்றனர்.

இதில் 13 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில் ஈரோடு அணியை எதிர்த்து களமிறங்கிய AFFA U13 அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர். இதில் A.ஆதிஃப் 3 கோல்களையும், முஃபார்தீன் 2 கோல்களையும், S.ஆதிஃப், ஹுஸைன் ஆகியோர் தலா 1 கோலையும் விளாசி அசத்தினர்.

இந்த தொடரில் அதிரை வீரர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்ல அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.