அதிரை C.M.P லேன் வழியாக செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை…

1அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று எனது மகன் சி.எம்.பி லேண் பள்ளி விட்டு வரும்போது வெறி பிடித்த நாய் என் புள்ளை விரட்டி கடித்ததில் தொடையில் நாயின் கூர்மையான பல்லும் அச்சியும் நன்கு பதிந்துள்ளது நாய் கடித்ததும் பிள்ளை அழுது கூப்பாடு போட்டும் அக்கம் பக்கத்திலிருந்து யாரும் வரவில்லை அது அந்த தெருவுக்கே உள்ள விதி. நாய் கடிபட்டதும் என் புள்ளை ஓடாமல் பயத்தில் அழுதுகிட்டு குப்புர படுத்த என் புள்ளையை மீண்டும் அந்த வெறிபிடித்த நாய் தலை பகுதியில் நுகர்ந்து பார்த்துவிட்டு திரும்ப போய்விட்டதாம் தற்போது மகனுக்கு நம்மூர் அரசு மருத்துவமனையில் வெறி நாய் கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளது இந்த ஊசியை தொடர்ந்து சில நாட்கள் போட வேண்டுமாம். பெற்றோர்கள் எங்கள் மிகுந்த மண உளச்சளை ஏற்படுத்தி உள்ளது சகோதரர்கள் துஆ செய்யுங்கள் என் மகனுக்காக மேலும் நமதூர் அதிரை சேர்மன் அஸ்லம் காக்காவிடம் நாய்களை ஒழிக்க நடவடிக்க எடுக்குமாரும் பேசி உள்ளேன் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்கள் அவர்களுக்கு எங்கள் தரப்பிலிருந்து வேண்டிய உதவியை செய்வோம் இணியும் சி.எம்.பி லேணில் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பாதிர்கள் பெண்களும், வயதானோர்களும் கவனமாக செல்ல வேண்டும் அல்லாஹ் எல்லோரையும் பாதுகாப்பானாக!!

தகவல்: சிறுவனுடைய தந்தை முஹம்மது ஷஃபி (ரியாத்)

Close