Adirai pirai
education and jobs exclusive உள்ளூர் செய்திகள்

துபாயில் நடைபெற்ற தமிழ் கட்டுரைப்போட்டி… அதிரை மாணவி ஹனான் முதலிடம்!

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் ஹாஜா நஜ்முத்தீன். துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஹனான் ஹில்மிய்யா அங்குள்ள தி சென்ட்ரல் பள்ளியில் 10ம் கிரேடு படித்து வருகிறார்.

துபாயில் நடப்பு ஆண்டு ஜாயித் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு நேற்று தினத்தந்தி சார்பில் தமிழ் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் கட்டுரைப்போட்ட்யில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து இறுதி சுற்றுக்கு முன்னேறிய 19 பேர்களில் அதிரை மாணவி ஹனான் ஹில்மிய்யா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவருக்கு அதிரை பிறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.