முத்துப்பேட்டை அருகே பஸ் மோதி ஒருவர் மரணம்!

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா கம்பியூட்டர் நிறுவனத்தை நடத்தி வருபவர் நடராஜன். இவர் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஆலங்காடு ஈசிஆர் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இப்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Close