அதிரையில் நேற்று 4.5 மி.மீ மட்டுமே மழை பொழிவு

தமிழகம் முழுவதும் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் கன மழை விடிய விடிய கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் மழை நீர் தேக்கம் அடைந்துள்ளது. அதிரையை பொறுத்தவரை கடந்த 30 ஆம் தேதி 49.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த நிலையில் நேற்றைய தினம் மழையின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால் 4.5 மிமீ என்ற சொற்பமான அளவிலேயே மழை பொழிந்துள்ளதாக அதிரை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் கனமழைக்காக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Close