தேங்கும் தண்ணீர்… துடைக்கப்படாத அதிரை பிலால் நகர் மக்களின் கண்ணீர் (வீடியோ…)

அதிரை பிலால் நகர், தென் தமிழகத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அதிரைக்கு வருபவர்களுக்கு இதுதான் நுழைவாயில். இங்கு சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் அன்றாடம் வேலை செய்து வரும் கூலித்தொழிலாளிகள், கடைகளில் வேலை செய்யும் எளிய மக்கள். இப்பகுதியில் அதிகம் குடிசை விடுகளே உள்ளன. இதனை அதிரையின் ஒரு பகுதி என்று பலரால் அறியப்பட்டாலும் இது ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டாகவே உள்
ளது. எனவே இப்பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கிடைக்காமலே சென்று விடுகிறது.

நாமெல்லாம் மழைக்காலம் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் இப்பகுதி மக்களுக்கோ மழைக்காலம் என்றால் கஷ்டமும் வேதனையும் தான் மிச்சம். மிகவும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் இருப்பதனாலும், பழுதடைந்த சாலைகளினாலும் இப்பகுதியில் லேசான மழைக்கே தண்ணீர் வெள்ளமென வீதிகளை சூழ்ந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழைக்கும் இதே நிலைமை தான் இங்கு. அது மட்டுமின்றி தற்போது பெய்த சில நாள் மழைக்கே செடியன் குளம் நிரம்பியுள்ளது. இனி வரும் நாட்களில் மழை அதிகரித்தால் செடியன் குளம் நிறைந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விடும் அபாயம் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கையாக செடியான் குளத்தில் நிறம்பும் தண்ணிர் வெளியேற்றுப்பாதையை சரி செய்து வேறு நிறம்பாத குளங்களுக்கு திருப்பி விடலாம். தொடர்ந்து பெய்து வரும் மழையால் செடியன் குளம் என்னேரமும் நிறம்பி உபரி நீர் பிலால் நகருக்குள் நுழையும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்….

Close