முத்தலாக் சட்டம் – முஸ்லீம்களின் போராட்டக்கடலில் மூழ்கிய தமிழகம் (படங்கள் இணைப்பு)

முத்தலாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஜமாத்துல் உலமா சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் நடைபெற்றன.

இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதா என்ற பெயரில் ஷரீ அத் சட்ட உரிமையை பறிக்கும் செயலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறி, மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, தலைநகர் சென்னை தொடங்கி, நெல்லை, தஞ்சை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காரைக்கால், ராமநாதபுரம், தேனி, பள்ளப்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களில் அலைகடலென மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மாற்றுமத சகோதரர்கள் கலந்துகொண்டு காவி நடுவன் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Close