Adirai pirai
history islam இந்தியா

இந்திய எழுத்தாளர் அப்துல் கவிக்கு டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள் நிறுவனம்!

இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.


1930 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர் அப்துல் கவி தேஸ்னவி. உருது எழுத்தாளரான இவர் அந்த மொழியில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். வரலாறு, இலக்கியம் சார்ந்த அப்துல் கவியின் புத்தகங்கள் உலக அளவில் பிரபலமானவை. கடந்த 2011 ஆம் ஜூலை மாதம் தனது 80-வது வயதில் இவர் மரணமடைந்தார். இந்த நிலையில், அப்துல் கவி தேஷ்னவியின் பிறந்தநாளான இன்று அவரது இலக்கிய சேவையை போற்றும் வகையில், கூகுள் தேடுதளத்தில் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.