Adirai pirai
INFORMATION இந்தியா

உண்மையாகவே வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லையா? நம்பினால் நாம் தான் பாவம்

ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், அரசியல் சாசனப்படி ஆதார் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. அதேசமயம் ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கக் கூடாது. மேலும் வங்கிக் கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புப் பெற ஆதார் கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

அதே போல், அரசின் நலத்திட்டங்களை பெற, பேன் கார்ட் பெற ஆதார் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பலரும் வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என தெரிவித்து வருகின்றனர். இங்கு தான் மிகப்பெரிய ட்விஸ் இருக்கு.

தற்போது பெரும்பாலான பொதுத்துறை மற்று தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்க பேன் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேன் கார் வாங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி சுற்றி வளைத்து பார்த்தால் நேராக வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்காமல், மறைமுகமாக பேன் கார்ட் வாயிலாக ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கிறோம்.

இப்போது சொல்லுங்க நாம அப்பாவி தானே..?