Adirai pirai
Crime உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட 3 அதிரை இளைஞர்கள் திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் அடைப்பு!

அதிரை வண்டிப்பேட்டையில் நேற்று மாலை பைக்கில் வந்துக்கொண்டிருந்த நபர் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அதிரையர் மீது மோதியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர் நிஜாம்(PFI முன்னாள் பட்டுக்கோட்டை ஜோனல் ப்ரசிடண்ட்), அன்வர் (அதிரை நகர் SDPI கட்சி முன்னாள் தலைவர்), சைஃபுத்தீன்(நாம் தமிழர் கட்சியின் அதிரை நகர தலைவர்) அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்குவந்த போலீசாருக்கும் இந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு அதிரை வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகே இந்த மூன்று பேரும் நின்று கொண்டிருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்

இதனால் அதிரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையம் முன்பாக திரண்டனர். இருப்பினும் 3 பேரை காவல் துறையினர் விடுவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் கைது செய்யப்பட்ட அதிரை இளைஞர்கள் 3 பேரும் திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy