அமெரிக்காவின் நாசாவுக்கு சென்ற அதிரை மாணவர்கள்

அதிரையை அடுத்துள்ள உள்ளூர் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது பிரில்லியண்ட் CBSE பள்ளி. இங்கு அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் அங்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அறிவியல் சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் அதிரை மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர்.

Close