அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் டெங்கு கட்டுப்பாடு சுகாதார பணிகள் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிரையிலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து அதிரையில் டெங்குவை கட்டுப்பட்டுத்தும் வகையில் ஊரில் கொசுக்கள் உற்பத்தியாகும் நீர் தேக்கங்கள், குப்பை தொட்டிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. அத்துடன் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் குடியிருப்பு பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்கள் வீடுகள், மக்கள் கூடும் பகுதிகளில் நீர் தேக்க தொட்டிகளையும் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அறிவுரைகளை வழங்கினர்.

 

Close