Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் கலைஞருக்காக அமைதி பேரணி.!

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று மாலை 6:10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவால் தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது. சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பல மாநில முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்னும் சில மணி நேரங்களில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே கலைஞரின் மறைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிரையில் திமுக, மமக, காங்கிரஸ், த.மா.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்தும், சட்டைகளில் கருப்பு பட்டைகளை பதித்தவாறு அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

பேரணி பேரூந்து நிலையத்தில் இருந்து துவங்கி, பலஞ்செட்டி தெரு, சேர்மன் வாடி, செக்கடிமேடி, நடுத்தெரு, தக்வா பள்ளி வழியே மீண்டும் பேரூந்து நிலைத்தில் முடிவுக்கு வந்தது பேரணி. அதோடு இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.