மணல் குவாரியாகி வரும் அதிரை

அதிரை நெசவுத்தெரு, நடுத்தெரு, மரைக்கா குளம் சாலை, ஜாவியா சாலை, கடைத்தெரு சாலை, புதுமனைத்தெரு, ஆலடித்தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக தான் இமாம் ஷாபி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கில்களில் சென்று வருகின்றனர். மேலும் நாள்தோறும் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றன.

இந்த சாலை ஓரத்தில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டும், கட்டி முடிக்கப்பட்டும் உள்ளன.

இந்த கட்டிட வேலைக்காக சாலை ஓரம் கொட்டப்படும் மணல் சாலைகளில் பரவி உள்ளன. இதனால் இதனை கடந்து செல்லும் வாகனங்கள் சறுக்கி விழுந்து வருகின்றனர். வீடு கட்டும் பலர் இந்த மணலை அள்ளாத காரணத்தால் சாலையே மணலால் மூடப்பட்டு சாலை இருந்த தடமே தெரியவில்லை.

மேலும் இதில் பெரும்பாலான சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாலும் மணல் பரப்பு சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், அப்பகுதிகள் புழுதிக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாலையில் உள்ள மணலை உடனே அள்ள நடவடிக்கை எடுப்பதுடன் சாலைகளை விரைந்து சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டுகொள்கிறோம்.

Close