Adirai pirai
articles Technology உள்ளூர் செய்திகள்

அதிரையர்களை வாட்ஸ் அப்பில் குறிவைக்கும் மோமோ பேய்… ஷாக் ரிப்போர்ட்!

ப்ளூவேலை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் குறிவைத்து வருகிறது மோமோ. இதன் அச்சுறுத்தல் அதிரையிலும் உள்ளது. அதிரையை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களுக்கு மோமோ வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து மிரட்டியுள்ளது.

மோமோ சேலஞ்ச் என்றால் என்ன?

அடையாளம் தெரியாத நபர்களால் சில எண்களிலிருந்து வாட்ஸ்அப் மூலம் நாம் தொடர்பு கொள்ளப்படுவோம். அவர்கள் இடும் கட்டளைகளை நாம் ஏற்று அதன்படி செய்ய வேண்டும். மறுத்தால் முதலில் அகோரமான படங்கள், வீடியோக்கள் கொண்டு மிரட்டப்படுவோம். கடைசியில் நம் தனிப்பட்டத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டப்படுவோம். அவர்கள் சொல்லும் அத்தனை சேலஞ்சையும் நாம் செய்தாக வேண்டும் என்பதே மோமோ சேலஞ்ச். முதலில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த சேலஞ்ச் பின்னர் வாட்ஸ்அப் வழி அதிகம் பரவியதாக சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்று பல தளங்களில் லிங்க் பகிரப்படுகிறது. அப்படி என்னதான் இருக்கும் என்ற ஆர்வம் இறுதியில் நமக்கே ஆபத்தாய் முடிகிறது. இதனைச் செய்பவர்களின் நோக்கம் நமது தகவல் மூலம் நம்மை மிரட்டி நம்மிடமிருந்து கொள்ளையடிப்பதே என்று எச்சரிக்கின்றனர் தொழில்நுட்ப கலைஞர்கள்.