Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர்!

அதிரை சேர்மன் வாடி துவங்கி செக்கடிமேடு, நடுத்தெரு, ஜாவியா ரோடு வழியே ECரோடு வரையிலான புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் முறை சரியானதாக இல்லை என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இதனால் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் டெண்டர் காபி வழங்க வேண்டி பேரூராட்சி அலுவலக நிர்வாகிகளிடம் முறையிட்டனர். பின்னர் மனு அளித்தன் பெயரில் டெண்டர் விபரம் வழங்கப்படும் என பேரூர் ஆய்வாளர் வாக்குறுதி அளித்தார். இறுதியாக டெண்டர் கொடேஷன் வழங்கப்பட்டது.