Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை ரேசன் கடையில் மக்களை ஏமாற்றும் ஊழியர்கள்… ஆதாரம் இதோ… (படங்கள் இணைப்பு)

அதிரை வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜுபைர். இவர், இன்று காலை செக்கடி மேடு பகுதியில் உள்ள ரேசன் கடையில், இந்த மாதத்திற்கு தேவையான அரிசி, சக்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளார். இந்த பொருட்களை வாங்கும் போது ரேசன் கடையில் எடை போடும் ஊழியர் பொதுமக்கள் எடையை பார்க்க முடியாத வகையில் தனது பக்கமாக நிறுவை இயந்திரத்தை திருப்பி வைத்திருந்தார். மேலும், பொருட்களை வைக்கும், குடுவையில் முன்பே சக்கரை ஒட்டி இருந்துள்ளது. இவற்றை சுட்டிக்காட்டிய ஜுபைர் ஒட்டி இருந்த பொருட்களை அகற்றிவிட்டு அளவிடுமாறும் தெரிவித்துள்ளார்.

பொருட்களை வாங்கிய பிறகு சந்தேகமடைந்த ஜுபைர், மளிகை கடையில் இருந்த நிறுவை இயந்திரத்தில், ரேசன் பொருட்களை  எடை பார்த்துள்ளார். அப்போது, 2 கிலோ சக்கரையில், 28 கிராம் குறைவாகவும், ஒரு கிலோ பருப்பில் 50 கிராம் குறைவாகவும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது போல் ஒவ்வொரு பொதுமக்களும் ரேசன் கடை ஊழியர்களால் தினசரி ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுவிநியோகத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையிட்டு நடவடிக்கை எடுக்காதவரை இது போன்ற மோசடிகள் குறைவது சாத்தியமற்றது. மேலும், பொதுமக்களும் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது இது போன்ற மோசடி பேர்வழிகளுக்கு மேலும் தவறுகள் செய்வதற்குறிய ஆர்வத்தை தூண்டுகிறது.

செய்தியாக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி.