அதிரையில் தாறு மாறு மழை… தாறு தாறான தார் சாலைகள்… தடுமாறும் மக்கள்..! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில்  வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிரையிலும், கடந்த 4, 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இவ்வளவு மழை பெய்தாலும், குளங்களில் இருக்க வேண்டிய தண்ணீர் தார் சாலைகளை சூழ்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பாக போடப்பட்ட சாலைகள் கூட குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலைகள் சேரும் சகதியுமாக இருப்பதால் பெண்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடுமையான போராட்டங்கள், கோரிக்கைகளுக்கு பிறகு போடப்பட்ட இந்த சாலைகள் மிகவும் தரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே 5 முதல் 10 ஆண்டுகள் வரை தாங்கி நிற்க வேண்டிய சாலைகள் இன்று பள்ளங்களாக நம் கண் முன் தோன்றுகின்றன.

Close