Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் 2 மாதங்களில் இரண்டாக பிளந்த தார் சாலை (படங்கள் இணைப்பு)

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து கடற்கரைத்தெரு, தரகர் தெருவிற்கு செல்லும் வழியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த மழைக்கே இந்த சாலை உருக்குலைந்து சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்கப்பட்டதால் சற்று ஆறுதல் அடைந்த வாகன ஓட்டிகள், இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிரையில் மக்களின் பல கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சங்கள் செலவில் செய்யப்படும் இது போன்ற அரசு நலத்திட்டங்களில் ஊழல் நடைபெறுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். சாலை அமைப்பு திட்டங்களாகட்டும், வடிகால் திட்டங்களாகட்டும் அந்த பணிகள் முடிவடைந்த ஒரு வருடத்தில் அது பழுதடைந்துவிடுகிறது.

இதற்கு என்ன வழி என்று தெரியவில்லை…? இது அதிகாரிகளின் மீதான குற்றமா… அல்லது அதனை செய்யும் ஒப்பந்ததாரர்களின் மோசடியா… என்று புரியவில்லை…

மொத்தத்தில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை…