முக.ஸ்டாலினிடம் அதிரை SHISWA நிர்வாகிகள் வைத்த கோரிக்கை விபரம்..!

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகாணத்தில் நடந்து வரும் 36-வது சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை,

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அமீரகக் கிளை (SHISWA) நிர்வாகிகள் சார்பில் K.ஷஃபீக், N.ஜமாலுதீன், F.இப்ராஹிம், ஃபைஸல் ஆகியோர் சந்தித்து அதிரைக்கு நீர்நிலை மேம்பாடு, வடிகால் வசதிகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

அத்துடன் இந்த கோரிக்கைகளை, மு.க. ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்படி விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சென்னை ஃப்ரெஸ்கோ சூப்பர் மார்க்கெட் அதிரை ஏ.எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்கள் செய்திருந்தார்

Close