Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை சுரைக்காய் கொல்லையில் தீ விபத்து… எம்.எல்.ஏ நேரில் சென்று நிதியுதவி!

இன்று அதிரை வண்டிபேட்டை அருகே உள்ள சுரைக்காய் கொல்லை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் தனது சொந்த பணத்தில் ரூ.5000, அரசு நிதியில் ரூ.5000 வழங்கியதுடன், அவர்களுக்கு தற்காலிகமாக இருக்க இடமும் உடை, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இவர்களுடன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், அதிரை நகர கழக செயலாளர் பிச்சை, நகர துணை செயலாளர் தமீம், பட்டுக்கோட்டை தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.